திருப்பூரில் செயலி மூலம் கடன் தருவதாக கூறியதை நம்பி முன்பணம் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பல்லடம் அடுத்த கரடிவாவி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவர் சமூக வலைத்தளத்தில் வந்த ஆன்லைன் கடன் செயலி லிங்க்கை செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார்.
அப்போது அவரை தொடர்புகொண்ட மர்ம நபர்கள் கடன் தருவதாக ஆசைக்காட்டி 40 ஆயிரம் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ராஜூ குடும்பத்துடன் விஷமருந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது 6 வயது மகள் வின்சிலின் சிகிச்சை பலனின்றி பரிசாபமாக உயிரிழந்தார்.