இஸ்ரேல்- காசா போர் நிறுத்தத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
எட்டு மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தருணம் நெருங்கிவிட்டதாகவும், போர் நிறுத்த அழைப்பை காசா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஜோபைடன் கேட்டுக்கொண்டார்.
காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேலை ஆதரித்துவரும் அமெரிக்கா, முதன்முறையாக போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.