இமயமலையில் பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு மேற்கொண்டார்.
ரஜினிகாந்த் கடந்த மே 29-ஆம் தேதி தனது நண்பர்கள் ஸ்ரீஹரி உள்ளிட்டோருடன் இமயமலைக்கு சென்றார்.
முதலில் டேராடூன் சென்ற அவர், அங்கிருந்து ரிஷிகேஷ் சென்று சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் வழிபட்டார்.
பின்னர் பத்ரிநாத் கோயிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கும் அவர் செல்லவுள்ளார்.
பத்ரிநாத்தில் அவர் வழிபாடு நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.