மக்களவைத் தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேலை சேர்ந்த ஸ்டோயிக் என்ற அரசியல் பிரசார மேலாண்மை நிறுவனம் சதி செய்ததாக அமெரிக்காவின் ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்தியில் பாஜகவுக்கு எதிராக இஸ்ரேல் நிறுவனம் சதி செய்ததாகவும், தீங்கு விளைவிக்கும் நோக்கில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவை தாங்கள் முறியடித்ததாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் கூறியுள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4-இல் வெளியிடப்படவுள்ள நிலையில், ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.