உதகையில் கோடை சீசன் காரணமாக மே 31ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிப்பது வழக்கம்.
இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக, காவல்துறை சார்பில் மே 31ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வாகனங்கள் குன்னூர் வழியாகவும் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இந்த அறிவிப்பு தற்போது ஜூன் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.