காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் காட்சியளிக்கும் இக்கோயிலில், ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு விழாவுக்கான கொடியேற்றம் மேளம் தாளம் முழங்க நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் கொடி மரத்தின் அருகே எழுந்தருளிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு கருடாழ்வார் கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.