புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காணாமல் போன இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொத்தமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கோலாகலாமாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பிரசாத் என்ற நபர் திடீரென மாயமானார். இது குறித்து பிரசாத்தின் உறவினர்கள் புகாரளித்த நிலையில் போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் தேரோடும் வீதியிலுள்ள கிணற்றில் பிரசாத் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.