கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளக்காபாளையம் கிராமத்தில் உள்ள வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது ஜே.ஜே. காலனியை சேர்ந்த ஈஸ்வரன் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தது தெரியவந்தது.
இதனையடுத்து 13 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.