மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணியின் 56 -வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவச் சிலைக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவாங்கூர் சமஸ்தானத்தால் அடிமைப்பட்டு இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை, தாய் தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 -ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது.