கொலிஜியம் அமைப்பின் முடிவுகள் மற்றும் அதன் பின்னணி குறித்த விவரங்களை வௌியிட கோரி வழக்கு தொடர்ந்த நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளை பரிந்துரைக்கும் அமைப்பான உச்சநீதிமன்ற கொலிஜியம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என ராகேஷ் குமார் குப்தா என்பவர் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விளம்பர நோக்கத்துக்காக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.