நாடு முழுவதும் ஒரே நாளில் வெயிலுக்கு 61 பேர் பலியான நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் மின்விசிறிகள் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்கள் உள்ளிட்ட 61 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“தேர்தல் பரப்புரை தொடர்ந்திருந்தால் உயிரிழப்பு அதிகமாக இருந்திருக்கும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக, “வெயில் அல்லது மழை காலத்தில் தேர்தல் நடத்தினால் அனைவரும் பாதிக்கபடுவார்கள் என்பதால், இதமான சூழல் நிலவும் காலங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வரும் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், ஒரு மேசைக்கு வெறும் 7 மின் விசிறிகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது போதுமானது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களில் போதிய மின்விசிறிகள் மற்றும் கட்சி முகவர்கள் அமர போதிய இருக்கைகள் அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.