கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்றாவது நாளாக தியானம் மேற்கொண்டு வந்த பிரதமர் மோடி, தனது தியானத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்தார்.
பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி மாலை விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வருகை தந்தார். அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து மாலை 6 மணிக்கு மேல் தியானத்தை தொடங்கினார்.
இந்நிலையில் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதற்காக தியானத்தை நிறுத்திவிட்டு வெளியே வந்த பிரதமர் மோடி சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டார், பின்னர், மீண்டும் உள்ளே சென்று தியானத்தை தொடர்ந்தார்.
சுமார் 45 மணி நேரமாக தியானத்தில் ஈடுபட்டு வந்த பிரதமர் மோடி, பிற்பகல் 3 மணி அளவில் தனது தியானத்தை நிறைவு செய்து வெளியே வந்தார். பின்னர் அவர் திருவள்ளுவர் சிலைக்கும், காந்தியின் அஸ்திக்கும் மரியாதை செலுத்தினார்.