இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறப்போவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், தோல்வியின் விளிம்பில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே கத்திக் கொண்டிருக்கிறார் என விமர்சித்தார்.
விசிக தலைவர் திருமாவளவன் வெறுப்பின் அடையாளமாக உள்ளார் என்றும், வெறுப்பினை பற்றி திருமாவளன் பேசுவது வெட்கக்கேடு எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டதால் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.