பஞ்சாப் மாநிலம் ஃபதேகர் சாஹிப் மாவட்டம் அருகே, 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 2 ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்தனர்.
மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றான அம்பாலா – சிர்ஹிந்த் ரயில் பாதையில், மாதோபூர் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் பயணித்ததா என்பது குறித்த தகவல் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.