இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்படுவதாக நாசா அறிவித்துள்ளது.
இந்தியாவை பூர்விகமாக கொண்ட சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே இருமுறை விண்வெளி சென்று திரும்பியுள்ளார். ‘போயிங்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘ஸ்டார்லைனர்’ என்ற விண்கலம் கடந்த மே 7ஆம் தேதி சர்வதேச விண்வெளிக்கு புறப்படுவதாக இருந்தது.
ஆனால், ஏவப்படுவதற்கு, 90 நிமிடங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் புறப்படுவதற்கு எல்லா ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கடைசி வினாடியில் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இதன் மூலம் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு மேற்கொள்ளவிருந்த சுனிதா வில்லியம்சின் சாதனை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.