உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச்சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா நார்வே செஸ் தொடரின் கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் முறையாக வீழ்த்தினார்.
இந்த நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அதானி குழும தலைவர் கெளதம் அதானி, உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனையும், நம்பர் 2 வீரர் ஃபபியானோ கருவானாவையும் கிளாசிக்கல் செஸ்ஸில் பிரக்ஞானந்தா வீழ்த்தியது பிரம்மிக்க வைக்கிறது என்றும், நமது நாட்டின் மூவர்ணக் கொடி உயர பறக்கட்டும் என்றும் அதானி தெரிவித்துள்ளார்.