அமெரிக்காவில் ரோஹித் சர்மா ரசிகரை போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர்.
நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா- வங்கதேசம் இடையிலான பயிற்சி ஆட்டத்தின்போது ரசிகர் ஒருவர் அத்துமீறி, ரோஹித் சர்மாவை கட்டியணைத்தார். அப்போது அமெரிக்க போலீஸார் ஓடிவந்து அந்த ரசிகரை சரமாரியாக தாக்கினர்.
அவரை விட்டுவிடுமாறு ரோஹித் சர்மா கேட்டுக்கொண்டார். பின்னர், அந்த நபரை அங்கிருந்து போலீஸார் அழைத்துச் சென்றனர். இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பயங்கரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மாவிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.