ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இருந்தால்தான், அரசின் திட்டங்களால் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என தெலங்கானா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா தினத்தையொட்டி, ஹைதராபாத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தெலங்கானா மற்றும் தேசத்தின் உள்ளார்ந்த வளர்ச்சிக்கு அனைவரும் பங்கெடுக்க உறுதியேற்க வேண்டுமென வலியுறுத்தினார். எக்காரணம் கொண்டும் லஞ்சம் பெறக் கூடாது என அதிகாரிகளை அறிவுறுத்திய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இருந்தால்தான் அடிமட்ட மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.