வட சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையமான ராணி மேரி கல்லூரியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.
சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, மூன்று மையங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையமான ராணி மேரி கல்லூரியில், வேட்பாளர்களின் முகவர்கள் வந்து செல்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகிய அனைத்தையும் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டு அவர்களின் கீழ் மொத்தம், 47 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் ஆயிரத்து 384 பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.