திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் 800 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே நேரத்தில் நாட்டியமாடி உலக சாதனை படைத்தனர்.
திருச்சி சிவசக்தி அகாடமி சார்பில் “அர்ப்பணம்” என்ற பெயரில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் 5 முதல் 20 வயதிலான மாணவிகள் பங்கேற்றனர். அவர்கள் முருகர் வேடமணிந்து கைகளில் வேல் ஏந்தியும், காவடியை சுமந்தும் 17 நிமிடத்தில் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.