சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஸ்பெயினின் ரியல் Madrid அணி கோப்பையை வென்றது.
32 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், பட்டத்தை வெல்வதற்கான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்ட்மண்ட் அணியும், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின. ஆட்ட நேர முடிவில், 2-0 என்ற கோல் கணக்கில், ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ரியல் மாட்ரிட் அணி 15-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது