மகள் பவதாரணியை இழந்த துக்கத்தில் இருப்பதால், பிறந்தநாளை கொண்டாடவில்லை என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் 81 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகம் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். மேலும், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, பரிசுகளை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டேன். எனது மகளை இழந்து வாடுவதால் மனம் பிறந்த நாள் கொண்டாட மறுப்பதாக தெரிவித்தார்.