சிங்கப்பூரில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசிய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டுக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்த ஜெலென்ஸ்கி, உக்ரைனின் பாதுகாப்பு விவகாரம் குறித்து லாய்ட் ஆஸ்டினுடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா அளித்த போர்த் தளவாடங்களுக்காக அதிபர் ஜோ பைடனுக்கு உக்ரைன் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.