சிவகாசி அருகே மது போதையில் மினி பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் ரயில்வே ஸ்டேசன் அருகில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி பேருந்தை தடுத்து நிறுத்தி, ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு, பின்னர், மினி பேருந்தை திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். மேலும், ஓட்டுநர் சத்தியமூர்த்திக்கு பத்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.