வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்காட்டை சேர்ந்த முகேஷ், தமது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்றுக்கொண்டிருந்த காட்டுயானையை கண்டு இருவரும் தப்பி ஓடினர். இவர்களை துரத்தி சென்ற காட்டுயானை முகேஷை பலமாக தாக்கியது. இதையடுத்து, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட முகேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.