அசாமில் வெள்ள பாதிப்பினால் 11 மாவட்டங்களில் மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரெமல் சூறாவளிக்கு பிறகு மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளிலும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கச்சார், நகோன், ஹோஜா, கரீம்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மே 28ம் தேதி முதல் மழை, வெள்ளம், புயலுக்கு இதுவரை 12 பேர் பலியாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.