ராசிமணல் அணை கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, பூம்புகாரிலிருந்து மேட்டூர் அணை வரை விவசாயிகள் பேரணியாக செல்லவுள்ளதாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சீர்காழியில் நடைபெற்ற சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வரும் 10-ம் தேதி பூம்புகார் முகத்துவாரத்தில் தொடங்கும் இந்தப் பேரணி, தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல் வழியாக வரும் 12-ம் தேதி மேட்டூர் அணையை வந்தடையும் என்று கூறினார்.
முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி, அமராவதி, சிறுவாணி என தமிழ்நாட்டின் அனைத்து நதி நீர் உரிமைகளும் பறிபோகி வருவதாகவும், இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.