திண்டுக்கல் மாவட்டம் பொம்மனம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
பொம்மனம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வைகாசி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம், அந்த வகையில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி விழாவை ஒட்டி அம்மனுக்கு ஒவ்வொரு நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதையடுத்து மேளதாளம் முழங்க அம்மன் பூங்கரகம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது, முன்னதாக அம்மனுக்கு ஆதார் அட்டை போன்ற வடிவில் பேனர் வைத்து அப்பகுதியினர் விழாவை நடத்தியது வியப்படைய வைத்தது.