காஞ்சிபுரத்தில் உள்ள எட்டியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக மங்கல இசையுடன் மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, யாக சாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.