சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் எட்டு வயது சிறுமி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பச்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் – சங்கீதா தம்பதியர், மகள் வர்ஷாவுடன், மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் நடைபெறும் கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
அப்போது இயற்கை உபாதையை கழிப்பதற்காக மறைவான இடத்திற்குச் சென்ற சிறுமி, அருகேயிருந்த இரும்பு மின்கம்பத்தை தொட்டுள்ளார்.
இதில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுமி வர்ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மின்வாரியத்தின் அலட்சியத்தாலேயே, சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.