கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்தன.
நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் ஆடு உள்ளிட்ட கால்நடைகளை பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் வழக்கம்போல் தமக்கு சொந்தமான வயலில் ஆடுகளை மேய்ச்சலுக்குக்காக அவிழ்த்து விட்டுள்ளார்.
அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறின. இதில், 6 வெள்ளாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.