விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
மடவார்வளாகத்தில் பழமை வாய்ந்த சிவகாமி அம்மாள் உடனுறை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்து உள்ளது.
இக்கோயிலில் 18 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.