காஞ்சிபுரத்தில், வீரட்டானேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம், காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
புகழ் பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கியது. முதல் கால பூஜை மற்றும் நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்ற நிலையில், யாக சாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து, கலசங்கள், மூலவர் விமானத்திற்கும், ராஜகோபுரத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு, கோவில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.