தேனி மாவட்டம் சின்னமனூரில் ஓய்வு பெற உள்ள ஆசிரியை, மாணவர்களின் வாழ்க்கை குறித்து வெளியிட்ட புத்தகம் நல்ல வரவேற்பை பெற்றது.
சின்னமனூரைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியை உமாராணி என்பவர், வள்ளுவன் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்தார்.
பணி ஒய்வு பெறும் இவர் மாணவர்களின் வாழ்க்கை குறித்தும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே உள்ள அனுபவங்கள் உள்ளிட்டவை குறித்து சிட்டு எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.
இந்த நாவல் புத்தகம் ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.