தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள தோரணைமலை முருகன் கோயிலில் கல்வியில் மேன்மை பெற வேண்டி மாணவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அப்போது முருகப் பெருமானுக்கு 11 வகையான வாசனைப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மானவர்களின் வில்லுப்பாட்டு, காவடியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.