தனது வீட்டிலேயே மின்சாரம் தடைபட்ட போதும், தமிழ்நாடு மின்சாரம் மிகை மாநிலம் என தமிழக அரசு அறிக்கை வெளியிடுகிறது என முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமது பிறந்தநாளை ஒட்டி நேற்று சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலுக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பிரதமர் மோடி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி புரிவார் எனவும், தமிழகம் ஒரு ஆன்மீக பூமி என்பதை பிரதமர் மோடி நிருபித்துள்ளார் எனவும் தெரிவித்தார்.