காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
மும்மாட கோவில் என அழைக்கப்படும் இக்கோயிலில் மூன்று நிலைகளில் சுவாமி காட்சி தருகிறார்.
இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாட்களும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையை ஒட்டி சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, நகைகள் அணிவிக்கப்பட்டது. பின்னர் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கோவிந்தா கோவிந்தா பக்தி முழக்கமிட்டவாறு வழிபட்டனர்