திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்துறை கிராமத்தில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது தனியார் தோட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் சேவல் சண்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் வருவதை கண்ட அனைவரும் தப்பியோட முயற்சித்த நிலையில், 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அந்த பகுதியில் இருந்த சேவல்கள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 4 சவரன் நகைகள், 5 கார்கள், 20 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.