மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும், ராமநாதபுரத்தில் தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தான் மத்திய அமைச்சர் ஆவது குறித்து கடவுள்தான் முடிவு செய்வார் என்றும் கூறினார்.