உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகளை கொலீஜியம் நிராகரிக்கும்போது விரிவான விளக்கமளிக்க உத்தவிடக்கோரி தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது நீதித்துறையின் நேரத்தை வீணடிக்கும் மனு எனக் குறிப்பிட்ட நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், மனு தாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும், அபராதத் தொகையை 4 வார காலத்திற்குள், போரில் உயிரிழந்தோருக்கான நிதிக்கு செலுத்த வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.