ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கவுதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 11-ம் இடத்தில் இருந்த அதானி குழுமத்தின் பங்குகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கு காரணமாக முதலீட்டாரளர்களுக்கு இழப்பு ஏற்பட்ட நிலையில், அதானி குழுமத்திற்கு சாதகமான நீதிமன்ற கருத்துகளால் தொடர் முன்னேற்றத்தை சந்தித்தது.
இந்நிலையில், அதானி குழுமம், ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதாகவும் குழுமத்தின் சொத்து மதிப்பு 111 பில்லியன் டாலர் உள்ளதாகவும் ப்ளூம்பெர்க் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
இதனால் ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கவுதம் அதானி முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.