மும்பை கோலாப்பூர் சிறையில், கைதிகளுக்குள்ளே ஏற்பட்ட மோதலில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி முகமது அலிகானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கோலாப்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
சில விசாரணைக் கைதிகள் வடிகாலில் மூடப்பட்டிருந்த இரும்பு மூடியை எடுத்து தாக்கியதில் அலிகான் மரணமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக 5 விசாரணைக் கைதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.