ராஜஸ்தானில் கிணற்றில் விழுந்த 13 வயது சிறுவனை மீட்கும் பணி 50 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானின் ராஜ்ஸ்மான்ட் மாவட்டம் சாப்ளி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் லலித் சிங், ஆடு மேய்க்க சென்றபோது கடந்த மே 31-ஆம் தேதி கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பணி 50 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.