மதுரையில் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச்செல்லும்போது தப்பியோடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எஸ்.எஸ். காலனி பகுதியை சேர்ந்த தீபன்ராஜ், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை தினம் என்பதால் நீதிபதி வீட்டுக்கு போலீஸ் வாகனத்தில் தீபன்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது வாகனத்தில் இருந்து இறங்கிய தீபன்ராஜ் திடீரென தப்பியோடினார். இதனையடுத்து போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து தீபன்ராஜை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.