கேரளாவில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.
1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்ததையடுத்து பாறசாலையில் உள்ள பாரதிய வித்தியாபீடம் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரை திலகமிட்டும், ஆரத்தி எடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
நீண்ட நாட்களுக்கு பின் நண்பர்களை கண்டதால் மாணவர்களும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.