ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் செலாவணியில், 2.2 சதவீதம், அதாவது ரூ.7 ஆயிரத்து 755 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் வங்கியில் செலுத்தி பரிமாற்றம் செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டது.
ஆனால், கடந்த மே மாத நிலவரப்படி 97.82 சதவீத நோட்டுகள் மட்டுமே திரும்பி வந்துள்ளதாகவும், 2.2 சதவீதம், அதாவது ரூ.7 ஆயிரத்து 755 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கியில் டெபாசிட் செய்யப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.