தேர்தலில் பாஜக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெறும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலங்கானாவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தங்களுக்குச் சாதமாக வந்தால், காங்கிரஸார் மகிழ்ச்சியடைகின்றனர் என்று தெரிவித்தார்.
அதேவேளையில், பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு வந்தால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை காங்கிரஸ் குற்றம்சாட்டுவதாக ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.