நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில், அலுவலர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் என 38 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக, 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையை பொறுத்தவரை, 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் தலா ஆயிரம் போலீஸார் வீதம், 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.