மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில், அலுவலர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் என 38 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக, 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது.
நெல்லை தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, நாம் தமிழர் சார்பில் சத்தியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் நயினார் நாகேந்திரன் செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
இரண்டாவது இடத்தில் தானே இருக்கிறீர்கள் என்ன எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்கள் தீர்ப்பை ஏற்று தான் ஆக வேண்டும் என கூறினார்.
இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை, இன்னும் முடிவு வரவில்லை, மாற்றங்கள் இருக்கலாம் என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.