ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதால் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
நாட்டின் 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.
இதோடு ஆந்திரா உள்பட 4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. அந்தவகையில் ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது.
இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசக் கட்சி 133 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 13 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து படுதோல்வியை சந்தித்துள்ளது.
இதே போல ஜனசேனா கட்சி 21 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலைப் போலவே, 16 மக்களவைத் தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
இதனையடுத்து வருகின்ற 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2014-ல் தெலங்கானா பிரிந்த பிறகான ஆந்திர பிரதேசத்தில் முதல்முறையாக சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.